Home இலங்கைவட மாகாண ஆளுநர் VS வலம்புரி பிரதம ஆசிரியர்!

வட மாகாண ஆளுநர் VS வலம்புரி பிரதம ஆசிரியர்!

by admin

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் அவர்களுக்கு எதிராக வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து வலம்புரியின் பிரதம ஆசிரியர் காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி வலம்புரி பத்திரிகையில் பிரசுரமான “வடக்கு மாகாண ஆளுநருக்கு ஓர் அவசர மடல்” என்ற ஆசிரியர் தலையங்கத்திற்கு எதிராகவே குறித்த முறைப்பாடு பதிவாகி இருக்கிறது.

இதற்கமைய நேற்றைய தினம் திங்கட்கிழமை (22.04.24)  வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் யாழ்ப்பாணம்  காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தபட்டதுடன் வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை வடக்கு மாகாண ஆளுநர் சார்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கணக்காளர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More