232
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும் மற்றுமொரு சந்தேகநபா் 1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும் உலப்பனே சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love