223
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் , காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மா காண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார். மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணபப்டுகின்றன. சாவகச்சேரி , மருதங்கேணி , கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை என தெரிவித்தார்.
அதேவேளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love