158
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் முற்பகல் 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love