171
2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து இலங்கை சென்றுள்ள சந்தேகநபாின் பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொரு ளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது
சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love