Home இலங்கைசாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை    காவல்துறை  விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்கப்பட்டுள்ளன.  மீட்கப்பட்ட எறிகணைகள் சிலவற்றில் இருந்து வெடிமருந்துகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை   காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More