237
யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை காவல்துறையினா் மீட்டுள்ளதுடன் , மாணவியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயரும் மாணவியுடன் உதவிக்கு நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சிறுமி நெல்லியடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி காவல்துறையினருக்கு தகவல் வழங்கினா். .
நெல்லியடி காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து காவல் ர் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தொடா்ந்த விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love