யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் இது சாத்தியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் இன்று பங்கேற்றிருந்த அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதேவேளை நேற்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இலங்கைக்குகு முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இன்று பங்கேற்றிருந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கடந்த 16ஆம் திகதி இலங்கையை சென்றடைந்தார். அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.