முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டயானா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்து உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கமைய, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதை தடுத்து நீதிமன்றத்தினால் எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, டயானா கமகே வெளிநாடு செல்லவதற்கும் தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவினால் கடந்த 9 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார்.
அத்துடன் முறையற்றவிதத்தில் பதவியை பெற்றுக்கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அரசாங்கத்திற்கு சொந்தமான மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களையும் கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.
இதேவேளை கடந்த 15 ஆம் திகதி டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜந்து மணித்தியாலங்கள் வாக்குமூலமொன்றையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.