Home இலங்கைபோதைப்பொருளை இலங்கைக்கு  கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் பெண் கைது

போதைப்பொருளை இலங்கைக்கு  கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் பெண் கைது

by admin

 

200 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்கு  கடத்த முயன்ற 47 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டுப்  பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து குறித்த கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேக நபரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தனது பயணப் பையில்  மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய மூன்று பொதிகளுடன் மறைத்து  மூன்று கொக்கெய்ன் பார்சல்களை  அவா் கடத்த முயன்றதாக சுங்கத்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்துவதற்காக அவருக்கு 1000 அமெரிக்க டொலர்கள், விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் இலங்கையில் ஐந்து நாட்கள் தங்குவதற்கு   தங்குமிடங்கள்   வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More