181
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்
காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது.
தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் , குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் வெசாக் தினத்தில் கொழும்பில் இருந்து பிக்கு ஒருவர் அழைத்து வரப்பட்டு , தமிழில் பிரித் ஓதி வழிபாடுகள் இடம்பெற்றன.
குறித்த வழிபாட்டில் காங்கேசன்துறை காவல்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் தமிழ் காவல்துறையினர் கலந்து கொள்ள வேண்டும் என காவல்துறை உயர் மட்டத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு , தமிழ் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தமிழில் பிரித் ஓதி வழிபாட்டில் ஈடுப்பட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love