கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று சனிக்கிழமை (25) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிாிழந்துள்ளனா். . தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற தீ அணைப்பு படையினா் பல மணி நேரம் போராடி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
குறித்த மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டதுடன் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்ஹத தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குஜராத்தில் விளையாட்டுத் திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியயிருந்த நிலையில் அதேநாளில் டெல்லி மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்து ள்ளமை குறிப்பிடத்தக்கது