168
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து , ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியாலில் கையில் காயமடைந்த நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு , அத்துமீறி வைத்தியசாலை வளாகத்தினுள் நுழைந்து, வைத்தியசாலை கட்டடத்திற்குள் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் , காயமடைந்த நபரை இறக்கி விட்டுள்ளார்.
அதன் போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியருடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி முரண்பட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து , யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , குறித்த நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
Spread the love