Home இலக்கியம் சத்தியசோதனை நாடகத்தின் பின்னூட்டல் இது ஒரு நீண்ட பயணம்! ர.கஸ்தூரி.

சத்தியசோதனை நாடகத்தின் பின்னூட்டல் இது ஒரு நீண்ட பயணம்! ர.கஸ்தூரி.

by admin

கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணம் நாடகத்தின் மூலம் கிடைத்த ஒரு பொக்கிசமான நாட்கள். சத்தியசோதனை நாடகத்தினை வடக்கிலே அரங்கேற்றுவதற்காக கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து 24.04.2024 அன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி நுண்கலைத்துறை மாணவர்கள் மற்றும் நுண்கலைத்துறை தலைவருடன் பயணம் ஆரம்பமானது. இப்பயணத்தின் நினைவுகள் மற்றும் அனுபவங்களை வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாது. யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும் முதலில் சந்தித்த ஒரு மாமனிதர், அனுபவசாலி மற்றும் சத்தியசோதனை நாடகத்தினை எழுதிய குழந்தை .ம.சண்முகலிங்கம். அவரை சந்திப்பது எதையோ சாதித்த ஒரு எண்ணம் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்நாடகத்தில் நான் பங்குபற்றியமையே ஆகும். ஆரம்பத்தில் இந்நாடகத்திற்கு எங்களை அழைக்கும் போது நான் பாடல் பாடுவதற்காகவே வந்தேன். பாடசாலை நாட்களில் கூட நான் நாடகம் நடித்ததே இல்லை. ஆனால் நாடகத்தினை நெறியாளுகை செய்தவர் விரிவுரையாளர் ஜெயசங்கர் அவர்கள் என்னையும் நாடகத்தில் ஒரு பாத்திரமாக எடுத்தார். ஆரம்பத்தில் எனக்கு இதில் விருப்பமேயில்லை. ஆனாலும் நாட்கள் செல்ல செல்ல நாடகத்தில் ஒரு விருப்பம் ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தில் நான் பெற்ற முதல் நாடக அனுபவம் எனக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை.ம.சண்முகலிங்கம் ஜயாவை சந்தித்து அவருடன் உரையாடிய தருணம் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. அவரின் சுவாரஸ்யமான பேச்சில் அவரின் இளமைக்காலம்; எப்படி இருந்திருக்குமென ஒரு கணம் எண்ணினேன். அவரின் சந்திப்பை வாழ்வில் மறக்கமுடியாத தருணம் எனவே கூற வேண்டும்.
சண்முகலிங்கம் ஜயாவின் சந்திப்பின் பின் எமக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “சத்தியமனை என்ற ஓர் அழகும் மனதிற்கு அமைதியைத்தரக்கூடிய இடத்திற்கு வந்தடைந்தோம். இது ஒரு அளவான பரப்பினைக்கொண்ட ஒரு நூலகம். இங்கு தங்குவதற்கு வாய்ப்பை உருவாக்கித்தந்த விரிவுரையாளர் ஜெயசங்கர் ஜயாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மனஅமைதியை தருகின்ற ஒரு இடமாக உள்ளது. எமக்கு அனைத்தையும் ஒழுங்கு செய்து கொடுத்த சத்தியமனை பொறுப்பாளருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எம் அனைவரையும் சிறப்பாக வரவேற்றார். அங்குள்ள நூலகத்தைப் பற்றி கூறிN;ய ஆக வேண்டும் சிறியதாகிலும் முக்கிய விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. எமக்காக அந்நூலகத்தினை இரவு நேரங்களில் கூட பூட்டாமல்; கதவிலே திறப்பு வைக்கப்பட்டிருந்தது. இது எம்மில் அவர் கொண்ட நம்பிக்கையினை வெளிப்படுத்தியது. நாம் அங்கிருந்து செல்லும் நாளில் காலை உணவையும் எமக்காக ஆயத்தப்படுத்தி தந்து எம்மை சந்தோ~மாக வழியனுப்பி வைத்தார்.

யாழ் மத்திய கல்லூரியில் ஆற்றுகையின் போது

யாழ்ப்பாணத்தில் சத்தியசோதனை நாடகம் முதலில் மத்திய கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது. தரம் 10 ற்கு உட்பட்ட மாணர்வர்கள் நாடகத்தினை பார்வையிட்டனர். முதல் அனுபவம் இம்மேடையானது பெரிய, திறந்த வெளியாக இருந்ததினால் சத்தம் வெளியே பெரிதாக கேட்கவில்லை ஆகவே நாடகத்தினை சிறப்பாக நடித்த முழுமை இங்கு கிடைக்கவில்லை இவையனைத்தும் என் மனதில் தோன்றிய விடயங்கள் ஆனால் மாணவர்கள் அனைவரும் நாடகத்தினை இரசித்துப்பார்த்தனர். இதில் ஒரு நகைச்சுவையான விடயம் என்னவென்றால் அம்மாணவர்கள் நாங்கள் அவர்களைப்போல பள்ளி மாணவர்களென நினைத்து கிண்டல் செய்தனர். நாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறியும் அவர்கள் நம்பவேயில்லை. நாடகத்தின் பின்னர் நடைபெற்ற உரையாடலில் சில மாணவர்கள் தங்கள் கருத்துக்களையும் அவர்களின் விருப்பங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

அன்று மாலை தேசிய கலை இலக்கியப்பேரவையில் மீண்டும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாச்சார் வீடு என்பதால் இரு பக்கங்களிலும் பார்வையாளர் அமர்ந்திருந்தனர். காலை நடித்த மேடைக்கும் இ நாச்சார் வீட்டு மேடையமைப்பிற்கும் பெரிய வித்தியாசம் அதாவது காலை பாடசாலை மேடையில் சத்தமாக உரத்து நாடகம் அரங்கேற்றினோம் ஆனால் இங்கு உரத்த சத்தத்தில் நடிக்க தேவையில்லை இயல்பாக நாம் கதைக்கும் தொனியில் கதைப்பதே இதற்கு பொருத்தமாகும் ஆகவே எனக்கு சிறந்த அனுபவத்தினை இதின் மூலமாக பெற்றுக்கொள்ள முடிந்தது. அதாவது எமக்கு வழங்கப்பட்ட மேடைக்கு பொருத்தமானதாக எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும் பார்வையாளர் எமக்கு மிக அருகில் இருந்தமையால் ஒரு கூச்சத்தினையும் பயத்தினையும் ஏற்படுத்தியது. மிக அருமையாக நாடகத்தினை நடித்து முடித்தோம் காலை செய்த நாடகத்தினை விட இது மிகச்சிறப்பாக அரங்கேற்றப்பட்டதை என்னால் உணர முடிந்தது. நாடகத்தின் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது மிகவும் வித்தியாசமானதாகவும் பல தரப்பட்ட கருத்துக்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இவற்றிலிருந்து எமக்கு சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

பரி யோவான் கல்லூரி
மறுநாள் காலையில் பரி யோவான் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது. முதலாவது தரம் பத்திற்குற்பட்ட மாணவர்கள் பின்னர் உயர்தர மாணவர்களுக்குமாக இரு தடவைகள் அரங்கேற்றப்பட்டது. 40 வருடங்களுக்கு முன்னர் இக்கல்லூரியிலே இந்நாடகமானது முதல் தடவையாக நடிக்கப்பட்டது. சிறிய வகுப்பு மாணவர்கள் இதனை மிகவும் இரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர் உயர்தர மாணவர்கள் நாடகத்தினூடாக தற்கால நிலை கூறப்பட்டதினை உணர்ந்து தமது கருத்துக்களை எம்மிடம் பகிர்ந்து கொண்டதோடு தம்முள் எழுந்த கேள்விகளை வினவினர். ஆசிரியர்களும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்
பின்னர் சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்குச் சென்றோம் அங்கு மாணவர்களும் ஆசிரியர்களும் எமக்காக காத்திருந்தனர். பின்னர் நாடகம் அரங்கேற்றப்பட்டது. பின் ஒரு மாணவி குறிப்பு எடுத்து வைத்து நாடகத்தினையும் அதனை தற்கால சமூகத்தோடு ஒப்பிட்டு தனது கருத்தினை கூறியது சிறப்பானதாகும். சில மாணவர் தமது கருத்துக்களையும் கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

திருமறைக்கலைமன்றம்
மாலை 4 மணியளவில் திருமறைக்கலாமன்றத்தில் அரங்கேற்றப்பட்டது. இங்கு முதல் நடித்ததை விட மிகவும் சிறப்பாக நாடகம் அரங்கேற்றப்பட்டது. கலந்துரையாடலில் பல விடயங்கள் பற்றியும் நடைமுறைக்கல்வி பற்றி கலந்துரையாடலும் இடம்பெற்றது. இப்பயணமானது எமக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்ததுடன் அனுபவத்தினை எமக்கு அளித்திருக்கிறது. இந்நாடகத்தின் மூலமாக நிறைய விடயங்களை அறிந்தும் கற்றும் கொண்டுள்ளோம்.

திருநெல்;வேலி அம்மாச்சி
யாழ்ப்பாணம் வந்த மறுநாள் காலை> மதியம் மற்றும் மறுநாள் காலை அம்மாச்சி;யில் தான் உணவை உண்டோம். சொல்ல வார்த்தைகள் இல்லை. அனைத்து உணவுகளும் குறைந்த விலையில்> ருசியும் ஆரோக்கியமுமான உடனுக்குடன் சமைத்துத் தரும் உள்ளுர் உணவுகள். சுடச்சுட அனைத்து உணவுகளையும் அனைவரும் பகிர்ந்து உண்டோம். அதில் எனக்கு பிடித்த உணவாக அப்பமே முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது. இதற்கு முதல் எத்தனையோ கடைகளிலும் சரி வீட்டிலும் அப்பம் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது போன்ற சுவையில் நான் இதற்கு முன்னர் சாப்பிட்டதே இல்லை அவ்வளவு சுவை வார்த்தைகளால் கூற முடியாது. எனக்கு பிடித்த உணவே அப்பம் தான் ஆனால் அம்மாச்சி உணவகத்தில் அதனை உண்டதன் பின்னர் நான் இப்போது வேறு எந்நக் கடைகளிலும் உண்பதில்லை. இச்சுவையினை எக்கடையும் ஈடு செய்யாது. உணவுகளை தயார் செய்கின்ற பெண்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வீட்டில் சாப்பிடும் அந்த உணர்வை அவர்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். நான் கவனித்த ஒரு விடயம் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொருவர் அப்பத்தை செய்கின்ற போதும் சுவையானது கூடாமலும் குறையாமலும் அதே சுவையுடனே இருந்தது. நான் அவர்களிடம் கூறினேன் எம்முடன் பல்கலைக்கழகத்திற்கு வந்து எமக்கு உணவு செய்து தரும்படி கேட்டேன். அவர்களும் மறுக்காமல் வருகிறோம் என்றார்கள் இந்த நாட்கள் மறக்கமுடியாத நாட்களாகி விட்டன.

சத்திய சோதனை நாடகமானது இன்றைய நடைமுறைக்கல்வியின் பிரச்சினைகளை கூறுவதாக உள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இருந்த கல்வியின் நிலை தற்காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதை காண முடிகிறது.நாம் எவ்வளவு தான் கஸ்டப்பட்டு படித்தாலும் வேலை கிடைக்கப்போவதில்லை என்பதே நிதர்சன உண்மை. பாடசாலை மட்டங்களில் அழகியல் பாடங்களை நீக்கி விட்டார்கள். நாங்கள் பட்டதாரிகளாகி வெளியே வந்து என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி மனதில் ரணங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நாடகத்தின் மூலமாவது இந்நிலையினை மாற்ற முடியுமா? இந்நிலை மாறும் வரை இந்நாடகத்தின் மூலம் நாம் எமது பயணத்தை தொடருவோம்.

ர.கஸ்தூரி
நுண்கலைத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்
இலங்கை.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More