Home இலங்கைமாணவிகளுடன் துர்நடத்தை – ஆசிரியருக்கு கற்பிக்க தடை

மாணவிகளுடன் துர்நடத்தை – ஆசிரியருக்கு கற்பிக்க தடை

by admin

 

யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவிகளுடன் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் , காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , ஆசிரியர் தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு , குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More