Home இலங்கைதமிழ் பெயர்களை வையுங்கள்

தமிழ் பெயர்களை வையுங்கள்

by admin

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் முன்மொழியப்பட்டு  இறுதி செய்யப்பட்டு வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான அனுமதி வழங்கும்   கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மக்களுக்குபுரிந்து கொள்ளும் பட்சத்திலேயே, குறித்த திட்டங்களுடன் எமது மக்கள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும்.

இதேநேரம் குறித்த செயற்பாடுகள் திணிப்போ அல்லது அரசியல் நோக்குடையதோ இருப்பதான என்று எண்ணவேண்டாம். நான் சுயநலத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது.

அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் பார்க்கப்பட வேண்டும்.

இதேநேரம் கடந்தகாலத்தில் நாட்டின் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றின் தாக்கம் ஆகியவற்றால் கடந்த 3 வருடங்களாக இந்த நிதி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அது 320 மில்லியனாக கிடைத்துள்ளது.

அந்தவகையில் அந்த நிதிக்கான முன்மொழிவுகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து முன்னுரிமை அடிப்படையில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அரச அதிகாரிகளது முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில்  மக்களுக்கு உச்சபட்சமான பலனை கிடைக்க செய்வதே எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More