204
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடைய அன்னலட்சுமி இராமச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பப்பெண்ணுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு அவதியுற்று, மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் ஈரல் பாதிப்படைந்து அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
Spread the love