197
தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்” என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளி
யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு இளைஞனுடன் திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். அதனை அறிந்து, இளைஞன் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
அந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து , சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது “உன்னையே திருமணம் செய்வேன்” என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்று , தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண் மீது பெற்றோலை ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார்.
பெண்ணை படுகொலை செய்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
Spread the love