சிரட்டையில் காணப்படும் எண்ணெய்ச் சத்து என்புகளிற்கு பலம் அளிக்கின்றது.
சிரட்டையில் காணப்படும் எண்ணெய்ச் சத்து அஜீரணத்தை போக்கும் தன்மை கொண்டது.
அதனால் தான் சிரட்டையில் சூடான பாணங்கள் குடிக்கும் போது மூட்டுக்களிற்கு பலம் அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றது.
வயற்றுப்பிரச்சினைகளான மந்தம், செமிபாடின்மை என்பவற்றை போக்கும் தன்மை மிக்கது.
சிரட்டைக்கரியில் மாத்திரைகள் செய்யப்படுகின்றன.
உப்புச் சிரட்டை : சிரட்டையில் உப்பை இட்டு பாவிப்பதானால் உப்பில் காணப்படும் சில நச்சுப் பதார்த்தங்கள் உறுஞ்சப்படுகின்றன.
சமையல் அகப்பை : அரிசி, கறிக்குரிய பொருட்களை அகப்பையால் துலாவி சமைக்கும் போது அவற்றில் காணப்படும் நச்சுத்தன்மைகள் உறுஞ்சப்படுகவதுடன், அவற்றின் சத்துக்கள் கெட்டுவிடாமலும் பாதுகாக்கின்றது. (மூன்று மாத காலத்திற்குள் இச்சிரட்டைகளை மாற்றம் செய்தல் வேண்டும் இல்லையேல் அவற்றின் நீர்ப்பிடிப்பு, நன்மைதரும் வேதிப்பொருட்கள் அற்றுப் போய் விடும்)
தேங்காய் சிரட்டை எண்ணெய் : சிரட்டையின் மேற்பரப்பில் இருக்கும் எண்ணெய்யை சிரட்டைக்கரி மூலம் சிரட்டைகளை சூடேற்றி பிரித்தெடுத்து அதை மூட்டுநோய்க்கான எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் மூட்டுக்களிற்கான தசைநார்களை தளர்ச்சியடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
சிரட்டையில் நாம் சூடான பாணங்கள் அருந்துவது, சமையல் அகப்பையாக பயன்படுத்தும் போது அதன் பலன்கள் எமக்கு கிடைக்கப்பெறுகின்றன.