சந்தையில் கரட்டை கழுவி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால், மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மராட்சி பிரதேச சந்தையில் மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்படுவதால் , அது தொடர்பில் வியாபாரிகளிடம் கேட்ட போது , ” தம்புள்ளை சந்தையில் இருந்து வரும் கரட் மண்ணுடன் தான் வரும். அவற்றினை சந்தையில் உள்ள குழாய் நீரில் கழுவிய இதுவரை காலம் விற்பனை செய்து வந்தோம். தற்போது குழாய் நீரில் கரட் கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளமையால் , கரட்டை மண்ணுடன் விற்பனை செய்கிறோம். ” என தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரிடம் கேட்ட போது , தண்ணீர் குழாய் அடியில் கரட்டை வியாபரிகள் கழுவதால் , அப்பகுதி அசுத்தமாகிறது. அதனை வியாபரிகள் சுத்தம் செய்வதில்லை. அத்துடன் பெருமளவான நீர் விரயம் செய்யப்படுகிறது. அதனாலையே சந்தைக்குள் இருக்கும் குழாய் நீரில் கரட்டை கழுவ வேண்டாம் என கூறியுள்ளோம் என தெரிவித்தார்.