Home இலங்கை “தமிழ் மக்கள் பொதுச்சபை” அங்குரார்பணம்!

“தமிழ் மக்கள் பொதுச்சபை” அங்குரார்பணம்!

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு “தமிழ் மக்கள் பொதுச்சபை” என மாற்றம்!

by admin

தமிழ் மக்கள் பொதுச் சபையின் அறிக்கை

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் 30.04.2024 வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் 05.06.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டல் குழுவும் இருபத்தி ஐந்து பேரை உள்ளடக்கிய தலைமை ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. தலைமை ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து தமிழ் மக்கள் சபைக்குரிய செயற்குழுக்கள் தெரிவுசெய்யப்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை கூடி தேவையான முடிவுகளை எடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்ற அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் ஒப்பம்

1. சமூக அபிவிருத்தி அமைப்பு – மட்டக்களப்பு
2. நல்லோர் உலகை கட்டி எழுப்பும் அமைப்பு – மட்டக்களப்பு
3. இளைஞர் அமைப்பு மட்டக்களப்பு
4. மீன்பிடி சங்கம் திருப்பெருந்துறை – மட்டக்களப்பு
5. கிழக்கு பல்கலைகழக தமிழ் மாணவர் ஒன்றியம்
6. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
7. தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்
8. பண்னையாளர் சங்கம்
9. “சன்ரைஸ்” அமைப்பு
10. குரலற்றவர்களின் குரல் அமைப்பு
11. வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
12. “மக்கள் மனு” வடக்கு கிழக்கு சிவில் சமூகம்
13. தமிழர் கலை பண்பாடு மையம்
14. சமூக விஞ்ஞான ஆய்வு மையம்
15. “எம்பவர்” நிறுவனம் – திருகோணமலை
16. தமிழ் சிவில் சமுக அமையம்
17. தளம் அமைப்பு – திருகோணமலை
18. போராளிகள் நலன்புரிச்சங்கம்
19. ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பு
20. கால்நடை சமாசம் – மட்டக்களப்பு
21. வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்
22. க.இராசலிங்கம் – வாகரை சிவில் சமூச செயற்பாட்டாளர்
23. தவத்திரு அகத்தியர் அடிகள்- தென்கைலை ஆதீனம் – திருகோணமலை
24. சி.அ.யோதிலிங்கம் – சமூக விஞ்ஞான ஆய்வுமையம்
25. அருட்திரு.ப.யோ.ஜெபரட்ணம்- குருமுதல்வர் யாழ் மறைமாவட்டம்
26. கி.ஜெயக்குமார் – மறைக்கோட்ட முதல்வர் இளவாலை
27. சி.மதன்பாபு – இணையம் அமைப்பு
28. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம்
29. சே.ஞானமலர் – இரணைமடு டி-8 கமக்கார அமைப்பு
30. யாழ் வணிகர் கழகம்
31. ந.பரந்தாமன் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை
32. சி.சயந்தன் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை
33. வி.குயிலன் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை
34. ஏ.பெனடிக்ட் குரூஸ் – நப்சோ அமைப்பு மன்னார்
35. எஸ். மகாலிங்கம் – இணைச்செயலாளர் தனியார் பேருந்து (788)
36. ஆ.மோகன் பிரசாந் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை
37. த.சிறி – சமூக செயற்பாட்டாளர்
38. தம்பாட்டி கிராமிய கடன் நலன்புரிச்சங்கம்
39. எம்.கம்சன் – சமூக செயற்பாட்டாளர்
40. இரணைமடு கமக்கார அமைப்பு
41. கி.ஆறுமுகம்- சமுக செயற்பாட்டாளர்
42. வணபிதா.சதீஸ்டானியல் தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம்
43. வேலன்சுவாமிகள் – P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம்
44. பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் – அரசறிவியல்துறை தலைவர் – யாழ் பல்கலைக்கழகம்
45. அருட்தந்தை பிரான்சிஸ் யூட் ஞானராஜ்
46. அ.அன்னராசா – அகில இலங்கை மீனவ அமைப்பு
47. அ.யதீந்திரா – மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூகம்
48. ச.இளங்கோ – சமூக சமுர்த்தி நல்லூர் பிரதேச மட்டத்தலைவர்
49. அகரம் மக்கள் மையம் – திருகோணமலை
50. சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம்
51. யாழ் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம்
52. கால்நடை கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம்
53. பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம்
54. கிராமிய வங்கி நுகர்ச்சி கூட்டுறவு சங்கம் – யாழ்ப்பாணம்
55. விவசாய சங்க கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம்
56. யாழ்ப்பாணம் வணிகர் கழகம்
57. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு
58. வடமாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்
59. அகில இலங்கை மீனவ மக்கள் பொதுச்சங்கம்
60. அனலைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
61. ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் நலன்புரிச் சங்கம்
62. மெலிஞ்சிமுனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
63. எழுவைதீவு கிராம அபிவிருத்திச் சங்கம்
64. நாரந்தனை வடக்கு சனசமூக நிலையம்
65. வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசம்
66. புங்குடுதீவு நசரத் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
67. தம்பாட்டி நலன்புரிச் சங்கம்
68. ஜே98 சிவில் சமூக குழு
69. சி.பூஜா – சமூக செயற்பட்டாளர் மட்டக்களப்பு
70. ம.செல்வின் – சமூக செயற்பட்டாளர்
71. செ.கிரிசாந் – ஊடகவியலாளர்
72. இ.பாரதி – ஊடகவியலாளர்
73. மட்டக்களப்பு சிவில் சமூகம் – வணபிதா.ம.லூக்யோன்
74. சிவசிஸ்ரீ.வீ.கே. சிபாலன்குருக்கள்
75. ம.நிலாந்தன் – சமூக செயற்பாட்டாளர்
76. விஜயகுமார் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர்
77. உதயராஜ் – யாழ் மாவட்ட தனியார் பேருந்து இணையம்
78. காரைநகர் தனியார் பேருந்து சங்கம்
79. யாழ்மாவட்ட பாரதி ஊர்திகள் சங்கம்
80. இந்திரன் ரவீந்திரன் – சமூக செயற்பாட்டாளர்
81. கால்நடை பண்ணையாளர் அமைப்பு – மயிலத்தமடு மாதவனை
82. தமிழ் ஊடகத் திரட்சி (நிமிர்வு)
83. அருட்பணி லூக் ஜோன் – மட்டக்களப்பு சிவில் சமூகம்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More