பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் எனத் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தக்க நேரத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.மக்களவைக் குழுத் தலைவர் சுதீப் பந்த்யோபாத்யாய் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதார் தேர்வு செய்யப்பட்டார். மக்களவை கொறடாவாக கல்யாண் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத்தலைவராக சகரிகா கோஸ், மாநிலங்களவை கொறடாவாக நதிமுல் ஹக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி தக்க நேரத்தில் ஆட்சியை அமைக்கும் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி விரைவில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓரிரு நாட்கள் மட்டுமே நீட்டித்த அரசுகளும் கூட இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பான, சட்ட விரோதமாக ஆட்சி அமைக்க முயல்கிறார். அதற்கு தன்னால் வாழ்த்து சொல்ல முடியாது. பெரும்பான்மையான மக்கள் பாஜகவை நிராகரித்தே உள்ளனர். தனது வாழ்த்துகள் நாட்டுக்காக இருக்கும். இப்போது தேர்வான அனைத்து எம்.பி.க்களுக்கும் அவர்கள் கட்சிகளை வலுப்படுத்துவார்கள் பாஜகவை தாம் உடைக்கப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும்.. அது ஏற்கனவே ஏற்பட ஆரம்பித்துவிட்டது போலவே தெரிகிறது.. அந்தக் கட்சியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது பார்த்தாலே தெரிகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு கிடைக்கவில்லை அதனால் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.