Home இலங்கைபாக்கு நீரிணையை நீந்திக் கடந்த   சாதனை வீரன் ஹஷன் ஸலாமா

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த   சாதனை வீரன் ஹஷன் ஸலாமா

by admin

 

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட்  ஹஷன் ஸலாமா  நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.  நேற்று சனிக்கிழமை (15) அதிகாலை 02.00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில்   நீந்தி முடித்துள்ளார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வந்துள்ளாா்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.  இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.

இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா    , திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகி இருக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More