Home இலங்கைநயினாதீவு தேர்த்திருவிழா

நயினாதீவு தேர்த்திருவிழா

by admin

 

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை ,கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பேருந்து சேவைகளும் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகள் இடம்பெற்றன.

அத்துடன் அமுதசுரபி அன்னதான மடத்தில் பக்கதர்களுக்கு அன்னதானம் இடம்பெற்றதுடன், ஆலய சூழல்களில் பக்தர்களின் நலன் கருதி சாரணர்கள் , சென் ஜோன் அம்புலன்ஸ் , சென்சிலுவை சங்கம் மக்கள் நலன்புரி சங்கம் உள்ளிட்டவற்றின் தொண்டர்களும் சேவைகளில் ஈடுபட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More