294
சந்தையில் மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த சீனிவாசகம் கோவிந்தராஜ் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி மீன் வாங்க சென்ற சமயம் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love