Home இலங்கைசுவிஸில் வசிக்கும் கணவருக்கு வீடியோ கோல் எடுத்து உயிர் மாய்க்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சுவிஸில் வசிக்கும் கணவருக்கு வீடியோ கோல் எடுத்து உயிர் மாய்க்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by admin

சுவிஸ் நாட்டில் வசிக்கும் கணவர் ‘வீடியோ கோலில்’ இருக்கும் போது மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார் . யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது கணவருடன் கடந்த 24ஆம் திகதி தொலைபேசியில் வீடியோ கோலில் கதைத்துக்கொண்டிருந்த வேளை கணவன் மனைவிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.  அதனை அடுத்து குறித்த பெண் கணவர் வீடியோ கோலில் இருக்கும் போதே அவரது கண் முன்னே தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
அதனை அடுத்து கணவர் அயல் வீட்டிற்கு தொலைபேசி ஊடாக தகவல் தெரிவித்ததை அடுத்து , அயல் வீட்டார் அப்பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.   வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More