Home இலங்கைமுதியவரை   படுகொலை செய்த   இளைஞன் கைது

முதியவரை   படுகொலை செய்த   இளைஞன் கைது

by admin

 

முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோப்பாய் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இறப்பில் சந்தேகம் காணப்பட்டமையால் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து , கோப்பாய்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் முதியவருடன் வசித்து வந்த இளைஞனை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More