Home இலங்கைஉலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் யாழுக்கு பயணம்!

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் யாழுக்கு பயணம்!

by admin

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் வதிவிட பிரதிநிதி திரு.அப்துள் ரகீம் சித்திக் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்போது, உலக உணவுத் திட்டத்தின் “Food for Assets” செயற்றிட்டத்தின் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய்) ” Food for Assets” செயற்றிட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை செயற்படுத்தல் குறிப்பாக குளங்கள் கால்வாய்களை புனரமைத்தல் தொடர்பாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More