Home இலங்கைமுன்னாள் நகர பிதா உயிரிழப்பு!

முன்னாள் நகர பிதா உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற நிலையில் வீதியில் அமைக்கப்பட்ட சிறு மேட்டில் (பம்பிங்) விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More