நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18.07.24) நடைபெற்றது.
குறித்த நிகழ்ச்சி திட்டம் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 கிராமங்களை அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையின் பிடியிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஒரு லட்சம் வகையான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல் இளங்கோவன், சணச சங்கத்தின் தலைவர் டொக்டர் பி.ஏ.கிரிவந்தெனிய, சணச ஆயுட் காப்புறுதி நிறுவனத் தலைவர் எஸ்.கஜேந்திரன், சணச வேலைத்திட்டத்தின் வடக்கு,கிழக்கு இணைப்பாளர் டொக்டர் எஸ்.ராஜரட்ணம், யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்