கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சுமார் 2 கிலோ மீற்றர் சுற்ற வட்டத்திற்குள்ளேயே தொழில் செய்து வருகிறோம். பல வருட காலமாக அப்பகுதியில் தொழில் செய்து வந்தமையால் , எமது கடல் வளங்கள் அழிந்துள்ளன. அதனால் நாம் மாற்று தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதனால் மூன்று குடும்பங்களுக்கு ஒரு அட்டை பண்ணை தாருங்கள் என விண்ணப்பித்தோம். அதற்கான அனுமதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் பெற்று தர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் எமக்கு கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி கொடுக்க கூடாது என சில விஷமிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
நரியான் பிட்டி , கொக்குப்பிட்டி எனும் இடத்தில் தான் கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி கோரியுள்ளோம். அதனால் மீன் வளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. யாருடைய தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது.
எங்களுக்கும் கடல் வளத்திலும் சுற்று சூழலிலும் எங்களுக்கும் அக்கறை உண்டு என தெரிவித்தார்.