Home இலங்கையாழில். நண்பிக்கு பணம் கொடுத்து ஏமார்ந்தவர் உயிர் மாய்ப்பு!

யாழில். நண்பிக்கு பணம் கொடுத்து ஏமார்ந்தவர் உயிர் மாய்ப்பு!

by admin

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று , தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார்.

பண உதவியை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை மீள செலுத்தாத நிலையில் , வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்கு ஆளாகி , மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு, தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாக பதிவிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More