614
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் தபால் ஊழியர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த தபால் ஊழியர் ஒருவரின் வீடே நேற்றைய தினம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியில் சென்ற சமயம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love