332
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.
இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்திருந்தார்.
இந் நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love