Home உலகம்சொகுசு படகு விபத்தில் இலங்கையர் உயிர் தப்பினார் – பிரித்தானிய செல்வந்தரை காணவில்லை!!

சொகுசு படகு விபத்தில் இலங்கையர் உயிர் தப்பினார் – பிரித்தானிய செல்வந்தரை காணவில்லை!!

by admin

சிசிலி தீவிற்கு அருகில் மூழ்கிய சொகுசு படகில் இருந்து 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டவர்களில் இலங்கை பணியாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு நேற்று (19) இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது.

போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், அந்தப் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மூழ்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காணாமல் போயுள்ள நிலையில், பிரித்தானிய கோடீஸ்வரரான மைக் லிஞ்ச் என்பவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More