Home இலங்கைகொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட நிரோஷன்

கொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட நிரோஷன்

by admin

 

இலங்கை கிரிக்கெட் அணி  வீரர் நிரோஷன் டிக்வெல்ல கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நேற்றையதினம்    தேசிய விளையாட்டு ஒழுக்காற்று குழுவில் நடைபெற்ற    விசாரணையின் போது  அவா் தான்  கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியமையை   ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து  அவருக்கெதிராக விதிக்கப்படவுள்ள தண்டனை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தமுறை இடம்பெற்ற லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது இலங்கை ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான முகவரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது நிரோஷன் டிக்வெல்ல ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More