1.1K
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன .
இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் , முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம , முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Spread the love