Home இலங்கைசமூக வலைத்தளங்களை முடக்கப்படலாம்

சமூக வலைத்தளங்களை முடக்கப்படலாம்

by admin
 

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக  தொிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.  இந்நிலையில், 19 ம்,  20ம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த  காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்த கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More