182
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டனர்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
Spread the love