Home இலங்கைமகிந்தவின் மேலதிக வாகனங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு!

மகிந்தவின் மேலதிக வாகனங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு!

by admin

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் (backup vehicle) அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தங்காலையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு வந்த பின்னர் வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி தொடர்பான அரசியல்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வெளியாகும் முன்னரே, இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வது பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கருத்து தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர்களால் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கடிதம் அனுப்பி உள்ளதாக  தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை யோசிக்காமல் இவ்வாறு செயற்படுவது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More