128
யாழ்ப்பாணத்தில் தன்மையில் வசித்து வந்த முதியவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சிறிராகுலன் (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்றைய தினம் சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு கள தரிசிப்புகளை மேற்கொண்டனர். அதன் போது குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற போது , வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில், சடலமாக காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் அவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு , யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூற்று பரிசோதனையின் போது மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Spread the love