172
அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் அருச்சுனாவிற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததா ? இல்லையா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது . சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் அவர் விளக்கமறியலில் வைக்கும் போது , அவர் சிறை செல்ல முன்னர் , தனது சட்டவாளர் கௌசல்யா என கையை காட்டி விட்டு செல்கின்றார். அதன் பின்னர் கௌசல்யா சொல்வதனை தான் நாங்கள் கேட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் போது கௌசல்யா தென்பகுதியில் இருந்து ஒரு சட்டவாளரை அழைத்து வர வேண்டும் என தொிவித்தாா். அதற்கு நிதி தேவைப்பட்டது. அதனை எங்கள் நண்பர்கள் தான் திரட்டி கொடுத்தனர். ஆனால் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு
உண்மையில் நிதி சம்பந்தமாக வெளியாட்களுக்கு என்ன தெரியுமோ , அதான் எங்களுக்கும் தெரியும். தெரியாத விடயத்திற்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது. தேர்தல் முடிய தேர்தல் செலவீனம் தொடர்பில் அருச்சுனா வெளியிடுவார் என நம்புறேன். என தெரிவித்தார்.
Spread the love