Home இலங்கைலொஹான் ரத்வத்தே கைது

லொஹான் ரத்வத்தே கைது

by admin
 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே  மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  இன்று கண்டியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹானவில்    அமைந்துள்ள   வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக  காவல்  தலைமையகத்திற்கு கிடைத்த  தகவலின்படி  கடந்த 26ம் திகதி மிரிஹான  காவல்துறையினா் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று  சோதனையிட்ட போது  இலக்கத் தகடு இல்லாத  குறித்த  கார்  கண்டறியப்பட்டது.

குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு  சென்றுள்ளதாக ள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும்  காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தனா்.

இந்நிலையில்  இன்று கண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்தே, தற்போது மிரிஹான  காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More