1K
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்திற்கும் அதிகமானவர்களை கொண்ட வன்முறை கும்பல் , வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் , சைக்கிள்கள் என்பவற்றை சேதப்படுத்தியதுடன் , ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டி , தையல் இயந்திரம் என்பவற்றையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love