263
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர். இதன் போது சங்கத்திற்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடியதுடன், சங்க ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய திருக்குறள் உரைநூல் இச்சந்திப்பின் போது ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
தமிழ்ச் சங்க பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ், தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் செயலாளர் ச. லலீசன், விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்
Spread the love