142
9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரம் 4 இல் கல்வி பயிலும் பாடசாலை சிறுவனின் பெற்றோரினால் 13.11.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரான 38 வயது ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love