465
யாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 18 வயதான இளைஞன் வாளுடன் அட்டகாசம் புரிந்துள்ளார். இளைஞனின் செயற்பாடு எல்லை மீறி சென்றதை அடுத்து , ஊரவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து , நயப்புடைந்த பின்னர் வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் வாளுடன் ஒப்படைத்துள்ளனர். அதனை அடுத்து இளைஞனை கைது செய்த காவல்துறையினா் காவல் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love