Home இலங்கை2025ல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டம்!

2025ல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டம்!

by admin

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை ( 23.11.24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அமைச்சர்,

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

புதிய வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் திகதி தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More