520
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப் பட்ட பிடியாணை உத்தரவு இன்றைய தினம் திங்கட்கிழமை மீள பெறப்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்றில் முன்னிலையாகாத நிலையில், நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி , மருத்துவ காரணங்களால், வழக்கு விசாரணை தினத்தன்று மன்றில் முன்னிலையாகி தெரிவித்ததுடன் , மருத்துவ சான்றிழ்களையும் மன்றில் சமர்ப்பித்தார்
அதனை தொடர்ந்து மன்றினால் , பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது.
Spread the love