இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் அரசியல் குழு உறுப்பினராக தொிவு செய்யப்பட்டுள்ளாா். நேற்று (06.12.2024) நாடாளுமன்றில், அரசியலமைப்பு குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினா் சிறீதரனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்மொழிய தமிழரசுக் கட்சியினர் வழிமொழிந்துள்ளனர்.
25 உறுப்பினர்களில் ஜீவன் தொண்டமானை நாமல் நாஜபக்சவும், ரவி கருணாநாயக்கவும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள். வாக்கெடுப்பில் நால்வர் வாக்களிக்காமல் விலகிய நிலையில் 21 வாக்குகளில் 11 வாக்குகளை சிறீதரனும் , 10 வாக்குகளை ஜீவன் தொண்டமானும் பெற்றனா். இற்த நிலையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் வெற்றி பெற்று அரசியலமைப்பு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.